நுகர்வோருக்கு நிவாரணப் பை வழங்கும் திட்டம் : அமைச்சரின் அறிவிப்பு

Sri Lanka Sri Lanka Food Crisis Money Wasantha Samarasinghe
By Rakshana MA Mar 19, 2025 11:34 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்கு நிவாரணப் பை வழங்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதன்படி 5000 ரூபா பெறுமதியான பை 2500 ரூபாவிற்கு வழங்கப்படும். அதற்கான பணிகளை தற்போது லங்கா சதொச நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

சம்மாந்துரையில் மீண்டும் நாய்களுக்கு தடுப்பூசி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சம்மாந்துரையில் மீண்டும் நாய்களுக்கு தடுப்பூசி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நிவாரண பை

மேலும், 5 கிலோகிராம் நாட்டு அரிசி இல்லையென்றால், அதற்கு பதிலாக 3 கிலோகிராம் நாட்டு அரிசி மற்றும் கோதுமை மாவை பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது சிவப்பு அரிசி மற்றும் 2 கிலோகிராம் கோதுமை மாவையும் பெறும் வாய்ப்பு உள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணப் பை வழங்கும் திட்டம் : அமைச்சரின் அறிவிப்பு | Essential Food Items Sathosa Price Today

அத்துடன் 2 கிலோகிராம் பெரிய வெங்காயம், 2 கிலோகிராம் உருளைக்கிழங்கு, 2 கிலோகிராம் பருப்பு, 1 டின் மீன், 3 கிலோகிராம் சிவப்பு சீனி, 2 கிலோகிராம் கோதுமை மா, 2 சமபோஷ பக்கட்டுகள், 70 கிராம் மற்றும் 90 கிராம் சோயாமீட் பக்கட்டுகள் 4 வழங்கப்படுகின்றன.

அதன்படி, 15 முதல் 17 கிலோகிராம் வரையிலான பொருட்கள் அடங்கிய ஒரு பை வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

தங்கம் வாங்கவுள்ளேருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

தங்கம் வாங்கவுள்ளேருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் குறித்து வெளியான புதிய தகவல்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் குறித்து வெளியான புதிய தகவல்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW