அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

Sri Lanka
By Mayuri Jul 19, 2024 07:41 AM GMT
Mayuri

Mayuri

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ கிராம் உளுந்து 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சதொச பால்மா விலை

400 கிராம் நிறையுடைய லங்கா சதொச பால்மாவின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 910 ரூபாவாகும்.

கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு | Essential Food Items Price Today In Srilanka

இதற்கமைய கோதுமை மா கிலோவொன்று 10 ரூபாவிற்கும், வெள்ளை சீனி கிலோவொன்று 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

வெள்ளை அரிசி விலை

வெள்ளை அரிசி கிலோ ஒன்று 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 200 ரூபாவாகும்.

கீரி சம்பா கிலோவொன்று 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 258 ரூபாவாகும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW