இளம் குற்றவாளிகளின் பயிற்சி பாடசாலையிலிருந்து 9 கைதிகள்! 6பேர் கைது

Badulla Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Fathima Apr 17, 2023 07:58 PM GMT

பதுளை - தல்தென சிறைச்சாலை புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 9 கைதிகளில் அருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பதுளை-தல்தெனஇளைஞர் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் இருந்து ஒன்பது கைதிகள் இன்று (17.04.2023) அதிகாலை அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இளம் குற்றவாளிகளின் பயிற்சி பாடசாலையிலிருந்து 9 கைதிகள்! 6பேர் கைது | Escaped Badulla Rehabilitation Center Arrested

தப்பியோடிய கைதிகளில் இருவர் தல்தென பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் காலையில் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்திருந்தார். 

தொடரும் விசாரணைகள் 

இந்நிலையில்,  தப்பிச் சென்ற மேலும் நான்கு கைதிகள் இன்று (17.04.2023) இரவு கைது செய்யப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எஞ்சிய கைதிகளை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் சிறு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இந்த சீர்திருத்த நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.