பெண்கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Strike Sri Lanka
By Rakshana MA Mar 13, 2025 07:01 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடளாவிய ரீதியில் உள்ள பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கிராம அலுவலர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன அரசாங்கத்திடம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் கிழக்கிற்கான ஒதுக்கீடு தொடர்பில் வெளியான அதிருப்தி

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் கிழக்கிற்கான ஒதுக்கீடு தொடர்பில் வெளியான அதிருப்தி

தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள...

அத்துடன் பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்டுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வரை இன்றைய தினம் தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கிராம அலுவலர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பெண்கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை | Ensuring Safety For Female Grama Niladharis In Sl

அதன் பிரகாரம் இன்றைய தினம் தொடக்கம் இரவு நேர அனர்த்தங்கள், மரணங்கள் போன்ற விடயங்கள் நிகழுமிடத்து அவ்வாறான இடங்களுக்கு பெண் கிராம அலுவலர்கள் செல்வதைத் தவிர்ந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வார நாட்களில் அலுவலகத்தில் இருக்க வேண்டிய மூன்று தினங்களில் காலை எட்டு மணி தொடக்கம் நண்பகல் ஒரு மணி வரை மட்டுமே அலுவலகத்தில் பணியாற்றவுள்ளதாகவும் கிராம அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  

மட்டக்களப்பில் அதிரடி சுற்றிவளைப்பு! 13கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மட்டக்களப்பில் அதிரடி சுற்றிவளைப்பு! 13கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அர்ச்சுனாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள ஜம்இய்யத்துல் உலமா

அர்ச்சுனாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள ஜம்இய்யத்துல் உலமா

            நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW