சீன நிறுவனத்தில் அடிமைகளாக்கப்பட்ட இலங்கை இளைஞர்கள்; இருட்டு அறையில் அடைத்துவைத்து கொடுமை

Wood Apple
By Nafeel May 11, 2023 11:43 AM GMT
Nafeel

Nafeel

தாய்லாந்தில் வேலை வாய்ப்பை வழங்குவதாகக் கூறி மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சீன நிறுவனமொன்றில் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்ட மேலும் எட்டு இலங்கை இளைஞர்கள் தொடர்பில் பகீர் தகவலொன்று தெரியவந்துள்ளது.

இந்த எண்மரில் மாரடைப்புக்கு உள்ளான அம்பாந்தோட்டையைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் கடந்த 8ஆம் திகதி அங்குள்ள இருட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்தமையும் தெரிய வந்துள்ளது.

உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை இருட்டு அறையில் அடைத்து வைத்த இளைஞருக்கு அவசர இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சீன நிறுவனத்தில் சிக்கியுள்ள இலங்கை இளைஞர்களை மீட்பதற்கு உடனடியாக தலையிடுமாறு மியான்மரில் உள்ள இலங்கை தூதரகம் வெளியுறவு அமைச்சகத்துக்கு அறிவித்துள்ளது.