ஊழியர் சேமலாப நிதியை கொள்ளையிட அனுமதிக்க முடியாது - சஜித்

Parliament of Sri Lanka Sajith Premadasa employee provident fund
By Mayuri Jul 11, 2024 09:19 AM GMT

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை மேற்கொண்ட வழிமுறையில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர் சேமலாப நிதி கொள்ளை

அவர் மேலும் தெரிவிக்கையில், உழைக்கும் சமூகத்தின் ஊழியர் சேமலாப நிதியை கொள்ளையிட்டு, செல்வந்தர்களைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியை கொள்ளையிட அனுமதிக்க முடியாது - சஜித் | Employee Provident Fund Sajith

இதற்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது.

சகலருக்கும் நன்மை பயக்கும் வகையில் முன்வைக்கப்படுகின்ற திட்டங்கள் அமையப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW