இஸ்ரேல் - ஹமாஸ் போர்க்களம்...! எலான் மஸ்க் விடுத்துள்ள அறிவிப்பு

Elon Musk X Israel-Hamas War Gaza
By Fathima Nov 22, 2023 09:20 AM GMT
Fathima

Fathima

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாதிப்புகளுக்கு நன்கொடையாக எக்ஸ் வலைத்தளத்தின் வருமானம் வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் வலைதளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தையே இவ்வாறு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவம் காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை காலி செய்ய உத்தரவிட்டது .

நன்கொடை

அந்த மருத்துவமனையில் இருந்து 2500 பேர் வெளியேற்றப்பட்டனர். பொதுமக்கள், மருத்துவர்கள், நகரக்கூடிய நோயாளிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் அங்கு இப்போது 32 கைக்குழந்தைகள் உள்பட 291 நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

இதனை மருத்துவமனையை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஐ.நா. குழு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.