எல்ல - வெல்லவாய கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள்

Sri Lanka Police Badulla Death
By Rukshy Sep 05, 2025 12:25 PM GMT
Rukshy

Rukshy

எல்ல - வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் அருகில் நேற்று இரவு நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீதான நீதவான் விசாரணை இன்று பிற்பகல் நடத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, தியதலாவ மருத்துவமனையில் வைக்கப்பட்ட, 8 உடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

பண்டாரவளை பதில் நீதவான் செனவிரத்ன வீரசிங்கவின் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சடலங்கள் மீதான விசாரணை

அதற்கமைய, உயிரிழந்தவர்ள் 27 வயதான டி.எச். டிரான் திவங்க, 32 வயதுடைய கே.ஏ. தினுஷிகா லக்மினி, 54 வயதான நிஹால் ரஞ்சித் வீரசிங்க, 42 வயதான மதுஷா அனுராதினி, 39 வயதான நிலுஷா ஸ்ரீமாலி, 45 வயதான ஷானிகா அனுராதினி, 34 வயதுடைய ஜெயனி ஜீவந்திகா மற்றும் 45 வயதான ஷானிகா அனுராதா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எல்ல - வெல்லவாய கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் | Ella Accident Today 8 Bodies Identities

கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் விசாரணைக்காக பதுளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.