ஜூனில் மின்கட்டணம் அதிகரிக்குமா..? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
எதிர்வரும் ஜூன் மாதத்தில் மின்சார கட்டண திருத்தத்தின் போது, கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுடன் இணைந்து, இந்த செலவு - மின்சார விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படுவதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
திறைசேரி மூலம் நிவாரணம்..
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொடர்ந்தும் திறைசேரி, இலங்கை மின்சார சபைக்கு காலவரையின்றி மானியம் வழங்க முடியாது. எனவே, உண்மையான உற்பத்தி செலவுகளின் அடிப்படையில் மின்சாரம் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
அரசாங்க QBMSQம் மீன்பிடித் துறை போன்ற பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு, திறைசேரி மூலம் நிவாரணம் வழங்க முடியும்.
எனினும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் போன்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள், வணிகக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
மின்சார கட்டண உயர்வு
மின்சாரக் காட்டணங்களின் அடுத்த திருத்தம் ஜூன் 1ஆம் திகதி மேற்கொள்ளப்படும்.
இது ஒரு தேர்தல் தந்திரம் அல்ல, கணிப்புகள் மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வையின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சரிசெய்தல் ஆகும்.
இலங்கை மின்சார சபை 220 பில்லியன் மரபுக் கடன் சுமையை கொண்டுள்ளது. அது இப்போது மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடனில் ஒரு பகுதியே கட்டண மறுசீரமைப்பில் சிறிது அதிகரிப்பை ஏற்படுத்தும்.
எனினும், அது, கடந்த 2024 டிசம்பரில் இருந்த விகிதங்களை விடக் குறைவாக இருக்கும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |