மின் கட்டண திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Sri Lankan Peoples Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Rakshana MA Jan 16, 2025 10:12 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் மின்சார கட்டணங்கள் 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம்(Public Utilities Commission) தெரிவித்துள்ளது.

இந்த பரிந்துரையானது ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய, பொது மக்களின் கருத்துக் கேட்கும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பரிந்துரை முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்து மேல் மாகாண பொது ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

மின்சாரக் கட்டணம்

இதன்படி, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு நடைமுறைக்கு வரும் மின்சாரக் கட்டணங்கள் குறித்த இறுதி முடிவு, பொதுக் கலந்தாய்வின் போது முன்வைக்கப்படும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

மின் கட்டண திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு | Electricity Board Reduction In Electricity Bill

அத்துடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துகள் தற்போது ஒன்பது மாகாணங்களிலும் நிறைவடைந்துள்ளதாக ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மின் கட்டண திருத்தம் தொடர்பான பொது ஆலோசனை கடந்த 10ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.

சம்மாந்துறை ஸம் ஸம் பாலர் பாடசாலையின் 2 ஆவது ஆண்டு நிறைவு விழா

சம்மாந்துறை ஸம் ஸம் பாலர் பாடசாலையின் 2 ஆவது ஆண்டு நிறைவு விழா

பொது மக்களின் கருத்து 

மேலும், அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு எரிசக்தி சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு எரிசக்தி சங்கங்களின் கிட்டத்தட்ட 400 பிரதிநிதிகள் இந்த மாகாண அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர்.

மின் கட்டண திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு | Electricity Board Reduction In Electricity Bill

இந்த நிலையில் மின்சார கட்டண திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள் கடந்த டிசம்பரில் மத்திய மாகாணத்தில் தொடங்கியது, பின்னர் பொதுப் பயன்பாட்டு ஆணையம் மற்ற மாகாணங்களிலும் அதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   

யாழில் கரையொதுங்கியுள்ள மர்ம வீடு : குவியும் மக்கள்

யாழில் கரையொதுங்கியுள்ள மர்ம வீடு : குவியும் மக்கள்

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW