நாட்டில் ஏற்பட்ட மின் தடை! காரணத்தை வெளியிட்ட மின்சார சபை
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Rakshana MA
கடந்த பெப்ரவரி 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக சபை தெரிவித்துள்ளது.
திடீர் மின் தடை
மின்தடை தொடர்பில் விசாரணையை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
எனவே, மீண்டும் இவ்வாறான நிலை ஏற்படுவதைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |