மேலதிக கொடுப்பனவு இல்லை: வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

By Fathima Dec 20, 2023 11:34 AM GMT
Fathima

Fathima

மின்சார சபை ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான எந்தவொரு மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சபை பொது முகாமையாளர் மற்றும் தலைவருக்கு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளார்.

செயற்பாடுகள் மற்றும் நிர்வாகத்தின் செலவைக் குறைப்பதற்கான முன்னர் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு அமைய மினசார சபை ஊழியர்களுக்கு முன்னர் செலுத்தப்பட்ட ஊக்கத்தொகைகள் மற்றும் கொடுப்பனவுகள் இதில் அடங்கும்.

சம்பள உயர்வும் வழங்கப்பட மாட்டாது

மேலதிக கொடுப்பனவு இல்லை: வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர | Electricity Board Employee Kanchana Wijesekara

2015 முதல் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் வழங்கப்படும் 25% சம்பள உயர்வும் வழங்கப்பட மாட்டாது. மேலும், CEB அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட 21 பல்வேறு கொடுப்பனவுகள் மற்றும் ஊக்கத்தொகைகள், 2023 இல் செலுத்தப்பட்ட தொகைகள், அவர்கள் எவ்வாறு செலுத்தப்பட்டது என்பது குறித்து தனக்கு அறிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு CEB அதிகாரிக்கும் வாடகைக்கு மற்றும் ஒதுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வாடகையாக செலுத்தப்பட்ட தொகைகள் ஆகியவற்றை என்னிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.