இலங்கையில் 16 மணிநேர மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதை நினைவுப்படுத்தும் அமைச்சர் கஞ்சன

Kanchana Wijesekera
By Mayuri Aug 29, 2024 03:34 AM GMT

இந்த நாட்டில் எத்தனை மணிநேரம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறதோ அதைவிட அதிகமான மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை இன்று பலர் மறந்துவிட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்த நாட்டில் 16 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது. மின் உற்பத்தி நிலையம் இருந்தபோதிலும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள், நிலக்கரி மற்றும் பிற பொருட்களை வழங்க முடியவில்லை.

சரியான நேரத்தில் சரியான தீர்மானம்

மின்சார சபை உட்பட அரச நிறுவனங்கள் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தன. மின் கட்டணத்தை அதிகரிப்பது என்பது பிரச்சித்தமான தீர்மானம் அல்ல.

இலங்கையில் 16 மணிநேர மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதை நினைவுப்படுத்தும் அமைச்சர் கஞ்சன | Electricit Price In Sri Lanka Today

ஆனால் ஜனாதிபதி சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பதற்குத் தேவையான தலைமைத்துவத்தையும் வலுவையும் எங்களுக்கு வழங்கினார்.

அப்போது நாட்டின் தலைவர் என்ற வகையில் அவர் வழங்கிய அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்களின் காரணமாக மின்சாரத் துறையின் செலவை ஈடுசெய்யும் விலைச்சூத்திரத்தை செயற்படுத்தி செலவை ஈடுசெய்ய முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW