கெபிதிகொல்லாவ பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Sri Lanka Police Anuradhapura Sri Lanka Police Investigation Accident
By Kamal May 23, 2024 01:13 PM GMT

கெபிதிகொல்லாவ (Kebithigollewa) பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யாகாவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பி ஒன்றின் ஊடாக குறித்த நபருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கெபிதிகொல்லாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.