இலங்கையில் இ-பஸ் சேவை: அமைச்சர் அறிவிப்பு
இலங்கை போக்குவரத்து சபையால் இயக்கப்படும் 50 மின்சார பேருந்துகளை இணைத்து வினைத்திறன் மற்றும் தரமான போக்குவரத்து சேவையை உருவாக்கும் முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
லக்தீவ இன்ஜினியரிங் கம்பனி பிரைவேட் லிமிடெட் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
50 பேருந்துகள்
மேலும், அமைச்சரவையில், உள்ளூர் அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் மின்சார பேருந்துகளை உருவாக்க தேவையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னோடித் திட்டமாக, 50 பேருந்துகள் 'இ-பஸ் என்ற பேருந்துகளின் ஊடாக மின்சார பேருந்துகளை பிரபலப்படுத்தும் திட்டத்தைத் தொடர திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.