சகல தேர்தல் அதிகாரிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
பொதுத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் ஆணையாளர்கள் நாளை (5) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது , அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு நிராகரிப்பு
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.
அத்தோடு, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |