வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
புதிய வாகனப்பதிவுகள் மற்றும் வாகனப் பெயர்ப்பதிவுகளின் போது இலக்கத் தகடுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடிதம் மூலமான அறிவித்தல்
இது தொடர்பாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவிக்கையில், புதிய வாகனப் பதிவின் போது வாகன உரிமையாளர்களுக்கு வாகன இலக்கத்தகடு வழங்காமை குறித்து கடிதமொன்று வழங்கப்படுகின்றது.
இதனடிப்படையில் மறு அறிவித்தல் வரை வாகன உரிமையாளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்த வேண்டாம் என பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த வருடம் (2025) வரையிலும் வாகன இறக்குமதி தொடர்பில் தற்போதைய அரசாங்கமானது கவனம் செலுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |