ஜனாதிபதி தேர்தல்: செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Oct 20, 2024 12:29 PM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையினை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான சட்ட நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொள்வார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்டிருந்த கால அவகாசம்

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவு தொடர்பான அறிக்கைகளை கையளிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த 13ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

ஜனாதிபதி தேர்தல்: செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Election In Sri Lanka

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 வேட்பாளர்கள் உரிய அறிக்கைகளை வழங்கியிருந்தனர்.

இருப்பினும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், சுயேச்சை வேட்பாளர் சரத் கீர்த்திரத்ன மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் வருமானம் மற்றும் செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW