பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 26, 2024 11:46 AM GMT

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது தமக்கு ஒதுக்கப்படும் வாக்களிப்பு நிலையத்தில் வாக்கினைப் பதிவு செய்வதற்கு நியாயமான அச்சம் காணப்படுமாயின் அவ்வாறானவர்கள் பிறிதொரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கான அனுமதியினை கோரமுடியுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தல்

இவ்வாறு அனுமதி கோருபவர்கள் தேர்தல் ஆணைக்குழு அலுவலகம் அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியுமென அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல் | Election In Sri Lanka

இதற்கமைய, எதிர்வரும் 1ஆம் திகதிக்கு முன்னதாக சம்பந்தப்பட்டவர்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW