செல்லுபடியான ஆவணத்தை கொண்டு வருமாறு தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 21, 2024 06:44 AM GMT
Mayuri

Mayuri

வாக்களிப்பதற்கு வருபவர்கள் செல்லுபடியான ஆவணமொன்றை கொண்டு வருமாறு மீண்டும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. 

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிமுதல் இடம்பெற்று வருகிறது. 

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இந்த நிலையில் தொடர்ச்சியாக வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

அதன்படி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காகத் தேசிய அடையாள அட்டை அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணத்தை கொண்டு செல்ல வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செல்லுபடியான ஆவணத்தை கொண்டு வருமாறு தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தல் | Election In Sri Lanka

செல்லுபடியான ஆவணங்கள்

இதற்கமைய,

  • தேசிய அடையாள அட்டை
  • செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
  • செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்
  • பொதுச் சேவை ஓய்வூதிய அடையாள அட்டை
  • முதியோர் அடையாள அட்டை
  • மதகுருமார்களுக்கான அடையாள அட்டை
  • தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம்
  • மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை
  • ஏனைய நபர்களுக்குத் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

கைத்தொலைபேசிகள் பயன்படுத்த தடை! தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவுறுத்தல்

கைத்தொலைபேசிகள் பயன்படுத்த தடை! தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW