தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி இன்றுடன் நிறைவு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 14, 2024 03:21 AM GMT

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி இன்றுடன் நிறைவுபெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை 80 வீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அருகாமையிலுள்ள தபால் அலுவலகங்களில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி தமது வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி இன்றுடன் நிறைவு | Election In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW