தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2863ஆக அதிகரிப்பு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 08, 2024 07:03 AM GMT

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2863ஆக அதிகரித்துள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 209 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

தீர்வு காணப்பட்டுள்ள முறைப்பாடுகள்

இதேவேளை, இதுவரையில் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 2113 முறைப்பாடுள் தொடர்பில் தீர்வு கண்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2863ஆக அதிகரிப்பு | Election In Sri Lanka

எஞ்சிய 750 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW