வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 04, 2024 05:04 AM GMT

ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை (04) ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் வவுனியா பொலிஸார் தங்களது தபால் மூல வாக்குகளை வவுனியா பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில்128,585, மன்னார் மாவட்டத்தில் 90,707, முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர் உள்ளடங்கலாக வன்னி தேர்தல் தொகுதியில் வாக்களிக்க 306,081 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery