சகல தபால் பணியாளர்களின் விடுமுறையும் இரத்து

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 25, 2024 04:22 AM GMT
Mayuri

Mayuri

சகல தபால் பணியாளர்களின் விடுமுறையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் வாக்குச் சீட்டு

அஞ்சல் வாக்குச்சீட்டுகள் விநியோகம் இருப்பினும், அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

சகல தபால் பணியாளர்களின் விடுமுறையும் இரத்து | Election In Sri Lanka

இதேவேளை, அஞ்சல் வாக்குச் சீட்டுகளை நாளைய தினம் அஞ்சல் நிலையங்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 4ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW