வாக்காளருக்காக செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

Election
By Mayuri Aug 20, 2024 02:45 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு வாக்காளருக்காக வேட்பாளர் ஒருவர் 109 ரூபாவையே செலவிட முடியும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளருக்காக செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை: வெளியானது வர்த்தமானி அறிவித்தல் | Election In Sri Lanka

கலந்துரையாடல்

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களுக்கிடையே இடம்பெற்ற நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, வேட்பாளர் ஒருவரின் மொத்த செலவினமாக 186 கோடியே 82 இலட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW