ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை

Election
By Mayuri Jul 26, 2024 12:56 PM GMT

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்கள், குடிமக்கள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை சிறந்த முறையில் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து இன்று (26) அவர் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

ஆலோசனைக் குழு கூட்டம்

பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு இன்று நாடாளுமன்றத்தில் கூடிய போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இவ்வாறான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை | Election In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW