அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளுக்கான விண்ணப்பம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாக்காளர்கள் போலி விளம்பரங்களை பார்த்து ஏமாறாமல் தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவு செய்து அந்த தகவல்களின்படி செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் மூல வாக்களிப்பு
அத்தோடு, பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் விளம்பரங்கள் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு எந்தப் பொறுப்பும் இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொய்யானவை எனவும் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் (05.08.2024) அன்று நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |