தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஆதரவு

Ranil Wickremesinghe President of Sri lanka Sri Lanka Presidential Election 2024
By Rukshy Jul 04, 2024 05:55 AM GMT
Rukshy

Rukshy

உயர் நீதிமன்றில்  நேற்றைய தினம் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் தாக்கல் செய்த மனு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது என்பதே தனது நிலைப்பாடு என ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

மனுத்தாக்கல் 

இதேவேளை ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ என்பவர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடனோ அது தொடர்பில் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஆதரவு | Election Commission S Decision Ranil Supports

முன்னதாக தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு நேற்றையதினம் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் குறித்த மனுவில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் திகதி தொடர்பில் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW