நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்

Sri lanka election 2024 General Election 2024 Parliament Election 2024
By Sivaa Mayuri Oct 07, 2024 07:14 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

Courtesy: Sivaa Mayuri

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களை வேட்புமனுக்களுடன் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையகம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆணையகம்,முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் உறுப்பினர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளனர் என்றும் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.  

காத்தான்குடி மாணவியின் புது முயற்சி

காத்தான்குடி மாணவியின் புது முயற்சி

தேசியப் பட்டியல்

2023 இலக்கம் 09 ஐ கொண்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் 80 (01) (P), 82 (01) (E), 82 (02), 89, 90 (04) ஆகிய சரத்துக்களின் படி, வாக்களிப்பு நாள் அறிவிக்கப்பட்ட நாள் வரையிலான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல் | Election Commission Instructions To Candidates

2023 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் எண் 9 இன் 80 (01) (பி), 82 (01) (இ), 82 (02), 89, 90 (04) ஆகிய பிரிவுகளின்படி, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட திகதியுடன் தொடர்புடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

மேலும், சரத்து 99 A இன் படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள், வேட்பு மனுவுடன், தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளையும் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

வேட்புமனுவுடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கையையும் சமர்ப்பிக்கத் தவறினால், அது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.  

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW