தேர்தல் பிரசார ஸ்டிக்கர்கள் தொடர்பில் ஆணைக்குழு பிறப்பித்துள்ள உத்தரவு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Harrish
வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து தேர்தல் பிரசார ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய தனியார் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து தேர்தல் பிரசார ஸ்டிக்கர்களையும் அகற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறும் செயல்
அத்துடன், குறிப்பிட்ட வேட்பாளர் அல்லது கட்சியை ஊக்குவிக்கும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர்களை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், சட்டத்தை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.