ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
ஜனாதிபதி வேட்பாளர்கள் அரச செலவில் விமானப்படையின் உலங்குவானூர்திகள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக அதனை பயன்படுத்த முடியாதென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்தோடு, அரசாங்க விமானங்கள் தேர்தல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு
எவ்வாறாயினும்,தேர்தல் அல்லாத பிற கடமைகளுக்கு விமானங்களை பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அரசாங்க விமானங்களை அவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரச பேருந்துகள் மற்றும் தொடருந்துகளை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தினால் அதற்கும் பணம் செலுத்தி பற்றுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |