18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளர் இடாப்பில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பில் தங்களது பெயர்களை தாமதம் இன்றி பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல்
தங்களது வீடுகளுக்கு கிடைக்க பெற்றுள்ள வாக்காளர் பட்டியல்களை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு அவர் அறிவித்துள்ளார். வீட்டில் இருக்கும் 18 வயதை பூர்த்தி செய்த அனைவரும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிரந்தரவதைவிடத்தை மாற்றிக் கொள்ளாதவர்களும், திருமணம், கல்வி அல்லது வேறு தேவைகளுக்காக தங்களது வதிவிடத்தை மாற்றியவர்களும் வாக்காளர் இடாப்பில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாக்களிப்பில் பங்கேற்க முடியாத போதிலும் வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் ஸ்ரீ ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.