மின்சாரம் தாக்கி வயோதிபர் ஒருவர் பலி

Badulla Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jul 17, 2024 03:37 PM GMT

பதுளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் வினீதகம பகுதியில் நேற்று(16.07.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 78 வயதுடைய வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

மேற்படி நபர் தனது தோட்டத்தில் விளையும் பயிர்களை விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கியே உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் தாக்கி வயோதிபர் ஒருவர் பலி | Elderly Person Died Electric Shock In Badulla

இந்நிலையில், இந்த மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW