முதியோர் கொடுப்பனவு பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்
முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கையை 10 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் வசந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதியோர் கொடுப்பனவு
இதனூடாக சுமார் 8 இலட்சம் பேருக்கு இதுவரையில் வழங்கப்பட்ட 3000 ரூபா முதியோர் கொடுப்பனவு 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதியோர் கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கையை 10 இலட்சமாக அதிகரிப்பதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |