கிழக்கு மாகாண ஆளுநரின் புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Sri Lankan Peoples Senthil Thondaman Festival Eastern Province
By Fathima Jun 29, 2023 06:30 AM GMT
Fathima

Fathima

இறை உணர்வோடும் தியாக சிந்தனையோடும் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்பதை பறை சாற்றும் வகையில், இறைத்தூதர் இப்ராஹிம் நபி இறை கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுகூரும் வகையில் புனித ஹஜ் பெருநாள் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநரின் புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி | Eid Mubarak Wishes For Muslim

இப்றாஹீம் நபி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இறைவனுக்காக மேற்கொண்ட பெரும் அர்ப்பணிப்புகளை நினைவு கூர்ந்து உலக வாழ் முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இத்திருநாளை கொண்டாடுகின்றனர்.

ஒற்றுமையாக வாழ வேண்டும் 

நபிகள் நாயகம் அளித்த போதனைகள், தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உன்னதமான நோக்கங்கள் என்பதை உணர்ந்துள்ள அவர்கள், அதன் வழி நின்று அடி பிறழாமல் பின்பற்றி இந்த புனித ஹஜ் பெருநாளை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.

கிழக்கு மாகாண ஆளுநரின் புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி | Eid Mubarak Wishes For Muslim

இந்த திருநாளில், திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி அன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும்.

மேலும் உலக வாழ் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் இந்த தியாக பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட வேண்டும் என்று வேண்டி, மீண்டும் ஒரு முறை எனது ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் ஆளுநர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.