நோன்புப் பெருநாளை நாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Iftar
By Fathima
நாட்டின் சில பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டமையினால், ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை நாளை (22.04.2023) கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இன்று ஆரம்பமானது. இதன்போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் நாளை மிகவும் மகிழ்ச்சியுடன் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
