ரமழானின் பயிற்சியை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பதே சிறந்தது: அசாத் சாலி

Sri Lanka Iftar
By Fathima Apr 22, 2023 12:29 AM GMT
Fathima

Fathima

இறைவழிபாடுகளில் திளைத்திருந்த நமக்கு இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததை, இறைவனின் அருட்கடாட்சமாகப் பார்ப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ரமழானின் பயிற்சியை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பதே சிறந்தது: அசாத் சாலி | Eid Mubarak Sri Lanka Muslim Today

புனித ரமழான்

"முஸ்லிம்களுக்கு இது உன்னத தினம். லௌகீக மோகத்திலிருந்து ஆத்மீக உலகுக்கான ஆயத்தங்களை அதகளவில் செய்வதற்கே புனித ரமழான் அருளப்பட்டது. இவ்வாறு நல்லமல்களில் ஈடுபட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் "அல்லாஹ்வின்" அருள் கிடைக்கட்டும்.

பிறரது தேவைகள், அபிலாஷைகளை கௌரவித்து வாழ்வதையே இஸ்லாம் விரும்புகிறது. பல்லின சகோதரர்கள் வாழும் நமது நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் முன்மாதிரியாகச் செயற்பட்டு வழிகாட்ட வேண்டியுள்ளது.

விதண்டாவாதங்கள், வீண் தர்க்கங்களில் ஈடுபடாமல் ரமழானின் பயிற்சியை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பதே சிறந்தது. இந்நன்னாளில் முஸ்லிம்களின் ஹலாலான அபிலாஷைகள் நிறைவேற நானும் பிரார்த்திக்கிறேன்.

இதுபோன்று, அடைய முடியாமல் அலைக்கழியும் நமது அரசியல் அபிலாஷைகளுக்கும் ஒரு விடிவு கிடைக்கும். இதற்காக நமது தலைவர்கள் ஒன்றுபடுவது எப்போது? எல்லாவற்றையும் தனிப்பட்ட இருப்புக்கான பிழைப்பாக நோக்காமல், சமூகத்தின் இருப்புக் குறித்து சிந்திப்பதே சிறந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.