அனைத்து உறவுகளுக்கும் இன்பம் பொங்கும் ஈகைத் திருநாள் ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள் : அமீர் அலி
Iftar
By Jenitha
எமது இலங்கைத் திருநாட்டில் நோன்புப் பெருநாளை உவகையுடன் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இன்பம் பொங்கும் ஈகைத் திருநாள் ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
‘பல வருடங்களின் பின் அமைதியான, மனநிறைவான ரமழான் மாதத்தை அடையப் பெற்று இரவு தோரும் இடைஞ்சலில்லா இரவு வணக்கங்களையும்,நல்லமல்களையும் செய்து நோன்புகளை நோற்று மனநிறைவுடன் பெருநாளை கொண்டாட அருள் புரிந்த வல்லோனை நினைவு கூர்ந்து அவனது நல்லருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்க இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறேன்‘ என்றார்.