முட்டையின் விலை அதிகரிக்கும் அபாயம்!
இம்மாதம் நடுப்பகுதியில் முட்டையின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டையின் விலை வேகமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முட்டை வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்து, இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விலையுடன் செலவு ஈடுகட்டல்
கோழிப்பண்ணைகளில் 28 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையிலும் கொள்வனவு செய்யப்படும் முட்டையானது வியாபாரிகளினால் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு 34 ரூபாவாக அதிகரித்துள்ளதால், முட்டை விற்பனையில் உற்பத்திச் செலவை ஈடுகட்ட முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதனை தொடர்ந்து கோழிக்கான உணவாக வழங்கும் வெள்ளை அரிசி ஒரு கிலோ 80 ரூபாவாக காணப்பட்டது. தற்போது அரிசி உற்பத்தி நிலையங்களில் அதன் உற்பத்தியினை நிறுத்தியுள்ளதால் ஒரு கிலோ வெள்ளை அரிசி 140 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஒரு கிலோ 140 ரூபாவாக இருந்த சோளத்தின் விலையும் தற்போது 170 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சரிந்துள்ள வருமானம்
கோழிக்கான உணவின் விலை அதிகரித்த நிலையில் முட்டைக்கான விலைக் குறைப்பினால் தங்களின் வருமானம் சரிந்துள்ளதாக சிறு மற்றும் நடுத்தர கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |