முட்டை விற்பனையில் இன்று முதல் மாற்றம்

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples India Economy of Sri Lanka
By Thahir Apr 04, 2023 07:40 AM GMT
Thahir

Thahir

உள்ளூர் முட்டைகளை கிலோ கணக்கில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய முட்டை கிராமுக்கு 80 சதம் வீதம் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“முதலில் மத்திய மாகாணத்தில் கிலோ கணக்கில் உள்ளூர் முட்டை விற்பனை இன்று (04.04.2023) முதல் ஆரம்பிக்கப்படும்.

முட்டை விற்பனையில் இன்று முதல் மாற்றம் | Egg Price In Sri Lanka

உள்ளூர் முட்டை விற்பனை

பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு ஒரு கேக்கிற்கு 10 இந்திய முட்டைகள் தேவைப்படும் எனில், உள்ளூர் முட்டைகளை 6 அல்லது 7  தேவைப்படும்.

எனவே இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது.

இதன்படி,மத்திய மாகாணத்தில் கிலோ கணக்கில் உள்ளூர் முட்டை விற்பனையை தொடங்குவோம். இந்த முட்டைகளை 80 சதம் வீதம் விற்பனை செய்வோம்.”என தெரிவித்துள்ளார்.