நாட்டின் கல்வித்துறையில் பாரிய பாதிப்பு குறித்து கடுமையாக எச்சரித்துள்ள சஜித்

Sri Lanka Education Teachers
By Shalini Balachandran Jul 11, 2024 06:17 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

பாடசாலை அதிபர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வினை முன்வைக்கத் தவறும் பட்சத்தில் நாட்டின் கல்வித்துறையில் பாரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்த  இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “கல்வித்துறையில் இன்று பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது  பொல்துவ சந்தியில் இன்றும் அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

பலகோரிக்கைகள்

இந்த நாட்டில் சுமார் 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் பாடசாலை அதிபர்கள் உள்ளனர் அத்தோடு கொடுப்பனவு போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட பலகோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் கல்வித்துறையில் பாரிய பாதிப்பு குறித்து கடுமையாக எச்சரித்துள்ள சஜித் | Education Sector Affected By Teachers Protest

பாடசாலை அதிபர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வினை முன்வைக்கத் தவறும் பட்சத்தில் நாட்டின் கல்வித்துறையில் பாதிப்பு ஏற்படும்.

கல்வி அமைச்சர் உடனடியாக பாடசாலை அதிபர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வினை வழங்க முன்வர வேண்டும் அதாவது அதிபர் ஒருவருக்கு அவர்களின் தர நிலைக்கேற்ப பதவி உயர்வு வழங்கப்படும் போது அவர்களின் அடிப்படை கொடுப்பனவு 3000 முதல் 6000 ரூபா வரை குறைவடைகின்ற நிலையில் இது ஒரு பாரதூரமான பிரச்சினையாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW