ஆசிரியர் ஆட்சேர்ப்பு குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவித்தல்
ஆசிரியர் சேவை அரசியலமைப்பின் படி சுமார் ஆயிரத்து ஐநூறு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இதன் மூலம், வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகள் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளின்படி, ஏற்கனவே அரச சேவையில் உள்ள 22000 பட்டதாரிகள் எதிர்காலத்தில் ஆசிரியர் சேவையில் உள்வாங்க தகுதிப்பெற்றுள்ளனர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதிக்குள் இந்த ஆசிரியர் நியமனங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு ஆசிரியர் பற்றாக்குறை முற்றாக தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.