கல்வி பொதுத்தராதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவருக்கு நேர்ந்த விபரீதம்

Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Sri Lankan Schools
By Fathima Jun 04, 2023 09:32 PM GMT
Fathima

Fathima

இம்முறை கல்வி பொதுத் தராதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உறவினர்களுடன் கும்புக்கன் ஓயாவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை றோயல் கல்லூரியில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ஆர். எம். சிராந்த தில்ஷன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கும்புக்கன் ஓயா, மினிபுரகம பெரலியமங்கட பகுதிக்கு குளிப்பதற்குச் சென்றிருந்த நிலையில், அங்கு இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.