கொழும்பில் மாடியிலிருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Fathima
கொழும்பு ரொஸ்மன்ட் பிளேஸில்ழ அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஏழாம் மாடியிலிருந்து வீழ்ந்து பொருளியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமால் சேனாதிரட்ன என்ற முன்னணி பொருளியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தற்கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம்
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரதே பரிசோதனையின் பின்னர் இந்த சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி பொருளியல் ஆய்வு நிறுவனமான ப்ரொன்டயர் ரிசர்ச் நிறுவனத்தின் ஸ்தாபகராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் அமால் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.