மருத்துவபீடமாக தரமுயர்த்தப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகு!
Ministry of Education
Trincomalee
A D Susil Premajayantha
Eastern University of Sri Lanka
Education
By Fathima
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ அலகு சித்த மருத்துவபீடமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் கையொப்பமிடப்பட்டு, கடந்த 12 ஆம் திகதி அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.
சித்த மருத்துவபீடம்
இந்த பிரகடனத்தின் படி, இதுவரை காலமும் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கீழ் இருந்த சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது.
அடிப்படைத் தத்துவம், குணபாடம், நோய் நாடல் மற்றும் சிகிச்சை ஆகிய மூன்று கற்றல் துறைகள் சித்த மருத்துவ பீடத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளன.