கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு: கல்வி அமைச்சர் உறுதி

A D Susil Premajayantha Senthil Thondaman Eastern Province Education
By Sheron May 31, 2023 04:23 PM GMT
Sheron

Sheron

கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார்.

கல்வி அமைச்சில், நேற்று (30.05.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 4200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு: கல்வி அமைச்சர் உறுதி | Eastern Province Teacher Shortage Solution

கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள்

இந்தக் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக  கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக மூன்று மாத காலத்திற்குள், கல்வியியற் கல்லூரியில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களைக் கொண்டு பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.