கிழக்கு மாகாணத்தில் கிளீன் ஸ்ரீ லங்கா கடமை ஆரம்ப நிகழ்வு

Anura Kumara Dissanayaka Sri Lanka Eastern Province
By Laksi Jan 02, 2025 07:31 AM GMT
Laksi

Laksi

 கிழக்கு மாகாண புதுவருடப் பிறப்பு மற்றும் 'கிளீன் ஸ்ரீ லங்கா' கடமை ஆரம்ப நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிவழ்வானது நேற்று (1) கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஷட்.ஏ.எம்.பைஷல் தலைமையில் மாகாண வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த 'கிளீன் ஸ்ரீலங்கா' முதல் நாள் ஆரம்பம் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சு, சுகாதார அமைச்சு, சுதேச மருத்துவ திணைக்களம், சட்டப்பிரிவு, சமூக சேவைகள் திணைக்களம், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களம், சுற்றுலாத்துறை பணியகம், தேசிய கணக்காய்வுத் திணைக்களம் (உள்ளகப்பிரிவு) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு போன்ற அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் 'கிளீன் ஸ்ரீலங்கா' என்ற திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

ஜனாஸா எரிப்புக்குக் காரணமானவர்களை தண்டிக்க ஹக்கீம் தனிநபர் பிரேரணை

ஜனாஸா எரிப்புக்குக் காரணமானவர்களை தண்டிக்க ஹக்கீம் தனிநபர் பிரேரணை

கிளீன் ஸ்ரீலங்கா

2025 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வை கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஷட்.ஏ.எம்.பைஷல் தேசியக் கொடியையும், சுகாதார அமைச்சின் செயலாளர் எல்.பி.மதநாயக்க மாகாண கொடியையும் ஏற்றி வைக்கப்பட்ட பின்னர் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் கிளீன் ஸ்ரீ லங்கா கடமை ஆரம்ப நிகழ்வு | Eastern Province New Year Clean Sl Mission Event

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற 'கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய வேலைத்திட்ட நிகழ்வு நேரலை மூலம் ஒளிபரப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

63 அத்தியாவசிய பொருட்களின் பண்ட வரி தொடர்பில் வெளியான அறிவித்தல்

63 அத்தியாவசிய பொருட்களின் பண்ட வரி தொடர்பில் வெளியான அறிவித்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGallery