கிழக்கு மாகாண பள்ளிவாசல்களின் விசேட பொதுச் சபைக் கூட்டம்
கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் விசேட பொதுச் சபைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டம் நேற்று (26.08.2023) கிண்ணியாவில் கிண்ணியா விசன் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மூதூர் மஜ்லிசுஸ் சூரா அமீர் கரீம் ஹஸரத்தினால் பங்குபற்றுனர்களுக்கான நஸீகத் வழங்கப்பட்டது.
தொடர்ந்து தலைமையுரையை காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின்
தலைவர் ரவூப் A மஜீத் நிகழ்த்தினார்.
இதன்போது ஓய்வுநிலை மேல்நீதிமன்ற பதிவாளரும் கிண்ணியா மஜ்லிசுஸ் சூறா செயலாளருமான MSM.நியாஸினால் கடந்தகாலங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட் சமாதான செயன்முறைகள், முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்ட விதம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
நிரந்தர நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்த தீர்மானம்
தொடர்ந்து நடைபெற்ற சபையோர் கருத்துரையை தொடர்ந்து இருபத்தி ஏழுபேர் செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன் தற்காலிக தலைவராக மூத்த உலமா சம்மாந்துறை ACAM புஹாரி ஹஸரத்தும் தற்காலிக செயலாளராக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் அன்வர்தீனும் தெரிவு செய்யப்பட்டனர்.

யாப்பு குழு நியமிக்கப்பட்டதோடு அக்குழுவின் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண பிரதம சட்ட ஆலோசகர் சிரேஷ்ட சட்டத்தரணி அனிப்லெப்பை நியமிக்கப்பட்டார்.
மீண்டும் இரண்டு மாதங்களின் பின் பொதுச் சபையை மருதமுனையில் நடாத்தி யாப்பை அங்கீகரிப்பதுடன் நிரந்தர நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவெதென தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தை சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இப்ராகிம் நெறிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



