கிண்ணியா-குறிஞ்சாக்கேணி பால நிர்மாணம்: கிழக்கு ஆளுநர் உரிய நடவடிக்கை

Trincomalee Sri Lanka Eastern Province
By Laksi Nov 06, 2024 02:47 PM GMT
Laksi

Laksi

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலம் உடனடியாக நிர்மாணம் செய்யப்பட வேண்டியது அத்தியாவசிய தேவை எனவும் ஜனாதிபதியிடம் பேசி, இதற்கான நிதியினை பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்  ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவுக்கு இன்றையதினம் (06) காலை விஜயம் செய்து குறிஞ்சாக்கேணி பாலத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட படகு அனர்த்தத்தினால் 8 பேரை பலி கொடுத்தும், இன்று வரை இந்த பாலம் நிர்ணயிக்கப்படாமல் இருப்பது எனக்கு கவலை அளிக்கின்றது.

பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

தேவையான நிதி

இந்த மக்களின், கருத்துகளைக் கேட்கும் போது, நான் மெய்சிலிர்த்து போனேன். எனவேதான், இந்தப் பாலம் உடனடியாக நிர்மாணம் செய்யப்பட வேண்டும். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

கிண்ணியா-குறிஞ்சாக்கேணி பால நிர்மாணம்: கிழக்கு ஆளுநர் உரிய நடவடிக்கை | Eastern Governor Visit For Kinniya Town In Trinco

இதன் காரணமாகவே, ஜனாதிபதியுடன் பேசி, தேவையான நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்பதை இந்த மக்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம்

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம்

பிரித்தானிய உயர்ஸ்தானிகரால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி

பிரித்தானிய உயர்ஸ்தானிகரால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW