இலங்கைக்கு வருமாறு கமலுக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் அழைப்பு

Kamal Haasan Sri Lanka Jeevan Thondaman
By Fathima Jun 05, 2023 08:18 PM GMT
Fathima

Fathima

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு நடிகரும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள செந்தில் தொண்டமானுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்தைத் தொலைபேசியூடாகத் தெரிவித்துள்ளார்.

செந்தில் தொண்டமான் தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை மக்களுக்குச் செய்ய வாழ்த்துத் தெரிவிப்பதாகக் கமல்ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான், கமல்ஹாசனை கிழக்கு மாகாணத்துக்கு வருகை தருமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.